
IPL 2021: MS Dhoni, Other Chennai Super Kings Teammates Reach Dubai (Image Source: Google)
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இத்தொடரின் 2ஆம் பாதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.
சமீபத்தில் ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதில் மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
இத்தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்த அணிகளை முதல் போட்டியில் மோதவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.