
IPL 2021: Mumbai indians restrict RR by 90 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் - லூயிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
இதில் 12 ரன்களில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 24 ரன்களில் லூயிஸும் நடையைக் கட்டினார். அடுத்து வந்த சாம்சன், தூபே, பிலீப்ஸ், மில்லர் என வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.