இனிவரும் போட்டிகளிலும் அதிரடியில் ஈடுபடுவேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்னும் வர இருக்கும் போட்டிகளில் இதைவிட அதிக ரன்களை குவித்து டெல்லி அணிக்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் வழங்குவேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது.
அதனைத் தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியில் மீண்டும் இணைந்துள்ள முன்னணி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 47 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
Trending
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “இங்கிலாந்து தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக என்னால் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் பங்கேற்க முடியாமல் போனது. அப்போது நான் டீ.வி.யில் போட்டியை பார்த்த தருணங்கள் மிகவும் மன வேதனையை தந்தன.
அதன்பிறகு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்து மீண்டும் கடுமையாக பயிற்சி செய்தேன். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கூட ஆறு நாட்களுக்கு முன்னதாகவே வந்து பயிற்சியை ஆரம்பித்தேன். இன்றைய போட்டியில் எனது பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆனாலும் நான் திருப்தி அடையவில்லை இன்னும் வர இருக்கும் போட்டிகளில் இதைவிட அதிக ரன்களை குவித்து டெல்லி அணிக்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் வழங்குவேன்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now