
IPL 2021: Pant, Ashwin, Prithvi begin training with Delhi Capitals (Image Source: Google)
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்கவுள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின், ரிஷப் பந்த், அஜிங்கியா ரஹானே, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அக்சர் படேல், பிரித்வி ஷா ஆகியோர் அமீரகம் சென்று ஆறுநாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
தற்போது தனிமைப்படுத்துதலை முடித்துள்ள இந்த 7 வீரர்களும் சக அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.