தேனியிடன் கற்றுக்கொண்டதை அவருக்கு எதிராகவே பயன்படுத்துவேன் - ரிஷப் பந்த்
தோனியிடம் இருந்து தான் பெற்ற வித்தைகளை சிஎஸ்கேவிற்கு எதிராக பயன்படுத்த உள்ளேன்.
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. கடந்த ஆண்டின் ரன்னர் அப் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இந்த சீசனில் அதிரடி வீரர் ரிஷப் பந்த் வழிநடத்தவுள்ளார்.
காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் ரிஷப் பந்த். இந்நிலையில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியிடம் தான் அதிகமாக கற்றுள்ளதாகவும், கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் அவருக்கு எதிராக மோதவுள்ளது சிறப்பானது என்றும் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
Trending
இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல்ஸின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள ரிஷப் பந்த், இந்த தொடரில் தன்னுடைய சொந்த அனுபவம் மற்றும் தோனியிடம் இருந்து தான் பெற்ற வித்தைகளை சிஎஸ்கேவிற்கு எதிராக பயன்படுத்த உள்ளேன்.
தன்னை கேப்டனாக தேர்ந்தெடுத்த பயிற்சியாளர்கள், உரிமையாளர்களுக்கு நன்றி. இதுவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் கோப்பையை வெல்லாத நிலையில் இந்த சீசனில் கோப்பையை வெற்றி கொள்ள தான் தீவிர முயற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் பந்த் குறிப்பிட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now