
IPL 2021: PBKS restrict CSK by 134 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 12, மொயீன் அலி ரன் ஏதுமின்றியும், உத்தப்பா, ராயூடு ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்து அணிக்கு உதவினார். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் 12 ரன்களில் ஆட்டமிழக்க, டூ பிளெசிஸும் 76 ரன்களுடன் வெளியேறினார்.