
IPL 2021: Rajasthan Royals bowled out by 186 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்று வரும் 32ஆவது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் எவின் லூயீஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் எவின் லூயீஸ் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சாம்சன் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய லமோர் அதிரடியாக விளையாடி 4 சிக்சர், 2 பவுண்டரி என 43 ரன்களைச் சேர்த்தார்.