
IPL 2021: Rajasthan Royals name Evin Lewis, Oshane Thomas as replacement players (Image Source: Google)
கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டிருந்த 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சார் ஆகியோர் தனித்தனி காரணங்களினால, இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இதையடுத்து நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸ் மற்று வீரராக ஒப்பந்தம் செய்திருந்த ராஜஸ்தான் அணி தற்போது மேலும் இரு வீரர்களையும் தங்கள் அணிக்குள் இழுத்துள்ளது.