
IPL 2021: RCB restrict SRH by 141 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் - அபிஷேக் சர்மா இணை களமிறங்கியது. இதில் அபிஷேக் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ராயுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இருவரும் அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில்லியம்சன் 31 ரன்னிலும், ஜேசன் ராய் 44 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஹைதராபாத் அணி தடுமாறியது.