IPL 2021: RCB restricted RR by 149 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தன் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு எவின் லூயிஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இதில் ஜெய்ஸ்வால் 31 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எவின் லூயிஸ் அரைசதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய சாம்சனும் அதிரடியில் ஈடுபட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.