
IPL 2021: RCB Rope In George Garton For Pacer Kane Richardson (Image Source: Google)
ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான வேலைகளில் மூழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் நடப்பு சீசனில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஆடம் ஸாம்பா, டேனியல் சம்ஸ், ஃபின் ஆலன் ஆகியோருக்கு பதிலாக இலங்கை அணியின் வானிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா மற்றும் ஆஸ்திரேலியாவில் டிம் டேவிட் ஆகியோர் ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.