இருவருக்காக தனி விமானத்தை அனுப்பும் ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் இருவரும் தனி விமானம் மூலம் இன்று அமீரகம் புறப்படவுள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையடிவந்தது. இத்தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற இருந்தது.
ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இப்போட்டியை ரத்து செய்வதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து அறிவித்தன.
இதையடுத்து இந்திய அணி வீரர்கள், அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் பக்கம் தங்கள் கவனத்தையும் திருப்பியுள்ளனர். இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற இந்திய வீரர்களைத்தவிர மற்றவர்கள் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களை அமீரகம் அழைத்துவர அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிர முயர்ச்சியில் இறங்கியுள்ளன.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அந்தவரிசையில் ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை அமீரகத்திற்கு அழைத்துவர ஆர்சிபி அணி நிர்வாக தனி விமானத்தை ஏற்பாடுசெய்துள்ளது. அதன்படி இன்று இங்கிலாந்தில் இருந்து தனிவிமானத்தில் பயணிக்கும் விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நாளை அமீரகத்திற்கு வந்தடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now