
IPL 2021: Rishabh Pant, Prithvi shaw's Fifty helps DC post a total on 173 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் முதல் தகுதிச்சுற்றுப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - பிரித்வி ஷா இணை களமிறங்கியது. இதில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரித்வி ஷா அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின் 60 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அடுத்து வந்த அக்ஸர் படேலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.