
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 51ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 90 ரன்களை மட்டுமே குவித்தது.
அதனை தொடர்ந்து 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 8.2 ஓவர்களில் 94 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்னர் வரை ரோகித்சர்மா சர்வதேச டி20 போட்டி மற்றும் ஐபிஎல் போட்டிகள் என இரண்டிலும் சேர்த்து 398 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோஹித் அடித்த 2 சிக்சர்கள் மூலம் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சரை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை ரோகித் சர்மா 212 போட்டிகளில் விளையாடிய 227 சிக்சர்களை அடித்து உள்ளார்.