
IPL 2021: Rohit Sharma chases BIG record in MI vs CSK clash (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் காட்டும் அதிரடி பற்றி நாம் கூறி ரசிகர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஹிட்மேன் என்று புகழ்பெற்ற ரோகித்சர்மா அனாவசியமாக சர்வதேச பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிக்சர் அடிக்கும் வல்லமை கொண்டவர். அதிலும் அவர் புல்ஷாட் மூலம் அடிக்கும் சிக்ஸர்களுக்கு ரசிகர்கள் ஏராளம் என்று கூறலாம்.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் ஒரு இமாலய சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். எப்போதுமே களமிறங்கி முதலில் சில பந்துகளை கணித்து விட்டால் பின்னர் வாண வேடிக்கையை காட்டும் ரோகித் சர்மா எளிதாக சிக்சர்களை அடித்து அசத்துவார்.