IPL 2021: Royal Challengers Bangalore become the third team to qualify for the play-offs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 48ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 58 ரன்களை சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹென்றிக்ஸ், முகமது ஷமி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் - மயங்க் அகவர்ல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த மயங்க் அகர்வால் அரைசதம் அடித்து அசத்தினார்.