
IPL 2021: Royal Challengers Bangalore Contingent Boards Flight To Dubai (Image Source: Google)
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, மீதமுள்ள போட்டிகள் செப்ம்டபர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கபதறாக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இதில் பங்கேற்பதற்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவைச் சேர்ந்த இந்திய வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் ஆகஸ்ட் 21 முதல் பெங்களூருவில் தனிமையில் இருந்தனர்.
இதையடுத்து துபாய் செல்லும் அவர்கள் 6 நாள்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அதன்பிறகே, அந்த அணி பயிற்சியைத் தொடங்க முடியும்.