
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் தற்போதிலிருந்தே இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
அதற்கேற்றவாறு ஐபிஎல் அணிகளும் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ள நிலையி, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டையும் தொடரில் பங்கேற்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அண்ட்ரூ டை கூறுகையில்,“ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுவது மிகவும் வருத்தமாக உள்ளது. இருப்பினும் ஓராண்டிற்கு மேலாக நான் என் குடும்பத்தை பார்க்காமல் உள்ளேன். அதனால் நான் நிச்சயம் இம்முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.