
IPL 2021: Ruturaj Gaikwad, Du Plessis fire Knock helps CSK set a target on 200 (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஈயான் மோர்கன் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதையடுத்து சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வார், பாப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதிலும் கடந்த சில போட்டிகளாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், இன்றைய போட்டியில் எதிரணி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார்.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அரைசதம் கடந்து அசத்தியது. பின்னர் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெய்க்வாட் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மொயீன் அலியும் தந்து பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.