
IPL 2021: Ruturaj Gaikwad's ton helps CSK post a total on 189/4 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 47ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் இணை வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஃபாஃப் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி ஆகியோர் ராகுல் திவேத்தியா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.