
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 14 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், பூரன் ஆகியோர் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 19.4 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.