ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ம

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
Trending
இன்றைய போட்டிக்கான சென்னை அணியில் டுவைன் பிராவோ, இம்ரான் தாஹ்ர் ஆகியோருக்கு பதிலாக இங்கிடி, மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேசயம் ஹைதராபாத் அணி தரப்பில் அபிஷேக் சர்மா, விராட் சிங் ஆகியோருக்கு பதிலாக சந்தீப் சர்மா, மனீஷ் பாண்டே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாப் டு பிளெஸிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாக்கூர், லுங்கி இங்கிடி, தீபக் சாஹர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ரஷீத் கான், ஜெகதீஷா சுஜித், சந்தீப் சர்மா, கலீல் அகமது, சித்தார்த் கவுல்.
Win Big, Make Your Cricket Tales Now