
IPL 2021: Sunrisers Hyderabad Restrict Punjab Kings At 125/7, Holder Picks Up 3 Wickets (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 37ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கல் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரமும் 27 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.