
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை காலவரையின்றி பிசிசிஐ ஒத்திவைத்தது.
இந்நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களை எங்கு நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையில் தொடர் இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஏதேனும் ஒன்றில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில் கடந்த மே 29 ஆம் தேதி பிசிசிஐ யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத சூழலில் அவர்களுக்கான மாற்று வீரர்களை தயார் செய்யவும் ஐபிஎல் அணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.