
ஐபிஎல் தொடரில் யார்க்கர் நாயகன் என்று அழைக்கப்படுபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த இவர், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து, இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்றிருந்த நடராஜனுக்கு, நேற்று முந்தினம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உள்பட 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நடராஜனுக்கு மாற்று வீரராக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உம்ரான் மாலிக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அந்த அணியின் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக சென்றனர்.