
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது முதல்முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
ஆனால் அதன் பின்னர் தற்போது பலமாக திரும்பியுள்ள சிஎஸ்கே அணி இந்த தொடரில் முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கைவசம் மீதும் 7 போட்டிகள் இருக்கும் வேளையில் மூன்று போட்டிகளை வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் நிச்சயம் சிஎஸ்கே அணி இம்முறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு இறுதிப்போட்டியில் விளையாடி வெற்றி பெறும் அளவிற்கு வலுவாக உள்ளது. இந்தியாவில் தொடங்கி ஒத்திவைக்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகள் தற்போது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.