
IPL 2021: Varun, Sandeep test positive for COVID-19, RCB wary of playing KKR on Monday night (Image Source: Google)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமானவர் வருண் சக்கரவர்த்தி. இவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் மற்றோரு கேகேஆர் வீரரான சந்தீப் வாரியருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இருவரும் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேகேஆர் அணி இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது.