
IPL 2021: Warner, Pandey half century helps SRH set a target on 172 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். அதில் பேர்ஸ்டோவ் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழாந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த வார்னர் - மனீஷ் பாண்டே இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.