
IPL 2021: We're afraid of a batsman like Ruturaj Gaikwad, says Samson (Image Source: Google)
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன், அணியை வெற்றிபெற செய்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன்,“எங்களுடைய பேட்டிங் லைனில் உள்ள பவர் எங்களுக்கு தெரியும். அதனால் தான் நாங்கள் எப்போது தோற்றாலும் சற்று வருத்தமாக இருக்கும். இந்த விக்கெட் கடைசி 3-4 ஓவர்களில் பேட்டிங்கிற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. நிச்சயம் இரண்டாவது இன்னிங்சில் இந்த இலக்கை எங்களால் துரத்த முடியும் என்று நாங்கள் நினைத்தோம்.