ஐபிஎல் 2022: வெவ்வேறு குரூப்பில் சென்னை, மும்பை அணிகள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2022 சீசனுக்காக 2 பிரிவுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. நடப்பு சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. இதில், இம்முறை 5 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் படி, ராவுண்ட் ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெறுகிறது.
ஆனால் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் எப்படி நடக்கிறதோ அதே போல் இம்முறையும் போட்டிகள் நடைபெறுகின்றன.
Trending
அதன் படி குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குருப் பி பிரிவில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும், ஒரு அணி மற்ற அணிகளுடன் 2 முறை மோதும்.
மேலும், அடுத்த குரூப்பில் உள்ள 4 அணிகளிடம் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி சென்னை அணி, ஐதராபாத், பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணியுடன் தலா 2 முறை மோதும். கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளுடன் தலா ஒரு முறையும் மோதும்.
இதே போன்று 5 முறை சாம்பியனான மும்பை அணி, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ, சென்னை ஆகிய அணிகளுடன் 2 முறையும், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப் , குஜராத் ஆகிய அணிகளுடன் தலா ஒரு முறையும் மோதும். இதே போன்று பெங்களூரு அணி அடுத்த குருபபில் உள்ள ராஜஸ்தானுடன் 2 முறை மோதும்.
மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் வான்கடேவில் 20 போட்டிகளும், பிராபோர்ன் மைதானத்தில் 15 போட்டிகளும், டி.ஓய். பாட்டில் மைதானத்தில் 20 போட்டிகளும், புனேவில் 15 போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now