Advertisement

ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் ஓர் பார்வை!

ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

Advertisement
IPL 2022: A Complete Breakdown Of Gujarat Titans' Squad
IPL 2022: A Complete Breakdown Of Gujarat Titans' Squad (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 22, 2022 • 03:30 PM

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் இந்த சீசன் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி, ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் வாங்கி, பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 22, 2022 • 03:30 PM

அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல்லில் ஆடவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவந்த பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Trending

இந்த அணியின் பயிற்சியாளர்களாக ஆஷிஸ் நெஹ்ரா, கேரி கிறிஸ்டன் ஆகியோர் உள்ளனர். ஏலத்தில் ஜேசன் ராய், மேத்யூ வேட், டேவிட் மில்லர், லோக்கி ஃபெர்குசன், அல்ஸாரி ஜோசஃப் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களையும், விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, ஜெயந்த் யாதவ், ஆகிய இந்திய ஆல்ரவுண்டர்கள் மற்றும் வருண் ஆரோன், முகமது ஷமி, ரிதிமான் சஹா ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருக்கும் நிலையில், அந்த அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இறங்குவார்கள். 3ஆம் வரிசையில் இளம் வீரர் அபினவ் சடரங்கனியும், 4ஆம் வரிசையில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரும் இறங்க வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பர் மேத்யூ வேட். 

அதன்பின்னர் 6, 7 மற்றும் 8ம் வரிசைகளில் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, ராகுல் திவேத்தியா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் ஆடுவார்கள். ராகுல் திவேத்தியா மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவருமே ரிஸ்ட் ஸ்பின்னர்கள்.இவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் ஸ்பின்னராக ஆடுவார். சாய் கிஷோரும் பேட்டிங் நன்றாக ஆடுவார்.  

வேகப்பந்து வீச்சாளர்களாக இந்தியாவை சேர்ந்த முகமது ஷமியுடன் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் மற்றும் அல்ஸாரி ஜோசஃப் ஆகிய இருவரில் ஒருவரும் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச லெவன்: ஜேசன் ராய், ஷுப்மன் கில், அபினவ் சடரங்கனி, விஜய் சங்கர், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், அல்ஸாரி ஜோசஃப்/லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement