
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியொல் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ள மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்தாவது கோப்பையைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக கடந்தவாரமே சூரத்தில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தீபக் சஹாரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு வாங்கியது. கடந்த சில காலங்களாக பௌலராக மட்டுமில்லாமல் ஆல் ரவுண்டராக சஹார் தனது திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து, அவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகள் முனைப்பு காட்டின.