
IPL 2022 - A Look At Royal Challengers Bangalore's Squad & Schedule (Image Source: Google)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியொல் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்றிராத அணிகளில் ஒன்றாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்தாண்டு கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேசமயம் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, தென் ஆப்பிரிக்க வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆர்சிபியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.