ஐபிஎல் 2022: நடப்பு சீசனில் கம்பேக் கொடுக்கும் அசுர வேகப்பந்து வீச்சாளர்!
டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான தென் ஆப்பிரிக்காவின் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே நடப்பு சீசனில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ளதால், அனைத்து அணிகளும் ப்ளேயிங் 11 ஐ தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளன. ஜேசன் ராய், ஆர்ச்சர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விலகியதால் பின்னடைவும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக டெல்லி அணியால் மெகா ஏலத்தில் ரூ. 6.5 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட ஆண்ட்ரிஜ் நோர்ட்ஜே ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகின. காயத்தால், கடந்த நவம்பர் மாதம் முதல் எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் உள்ள அவர், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாது என்பதால் விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.
Trending
இந்நிலையில் அவர் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதாவது கடந்த மார்ச் 20ஆம் தேதியன்று மும்பைக்கு வந்துவிட்ட ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, முதல் சில போட்டிகளை மட்டும் தவறவிடவுள்ளார். ஏப்ரல் 2ஆவது வாரத்தில் மீண்டும் விளையாட தொடங்கிவிடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க வீரரான நோர்ட்ஜே, கடந்த 2 சீசன்களாக, பேட்ஸ்மேன்களுக்கு பயம் காட்டியவர். ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்துவீசியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு 156 கிமீ வேகத்தில் வீசி பட்லரின் விக்கெட்டை சாய்த்தார். கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்த ஆண்டில் டாப் 5 வேகமான பந்துவீச்சு பட்டியலில் அனைத்து இடங்களிலும் நோர்ட்ஜே தான் இருந்தார்.
போட்டி நடக்கும் மும்பை களத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் சாதகமாக இருக்கும். இங்கு அதிவேகமாக பந்துவீசும், ஆண்ரிக் நோர்ட்ஜேவால் அனைத்து அணி பேட்ஸ்மேன்களுக்கும் தலைவலி இருக்கப்போவது உறுதி.
Win Big, Make Your Cricket Tales Now