
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு நகரில் நடைபெற உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்ட புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது.
முன்னதாக இந்த ஏலத்தில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து 1,214 வீரர்கள் விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதை ஆராய்ந்து தணிக்கை செய்த ஐபிஎல் நிர்வாகம் அதிலிருந்து 590 வீரர்கள் மட்டும் ஏலத்தில் பங்கேற்க தகுதியானவர்கள் என அறிவித்துள்ளது.
கடந்த 2018க்கு பின் முதல் முறையாக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் இந்த ஏலத்துக்காக ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சரி இந்த ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் நடந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன டாப் வீரர்கள் பற்றி பார்ப்போம்.