ஐபிஎல் 2022: அடுத்த 5 ஆண்டுகளுக்கான தேடுதலில் நாங்கள் இறங்கியுள்ளோம் - சஞ்சு சாம்சன்
இந்த ஐபிஎல் ஏலமானது எங்களுக்கு மிகவும் முக்கியமானது,ஏனென்றால் அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு எங்கள் தளத்தை நாங்கள் நன்றாகத் தயார் செய்யலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு ஐபிஎல் ஃபிவர் தொற்றத்தொடங்கிவிட்டது. இதற்கு காரணம் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இதன்காரணமாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு, மெகா வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. மேலும் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சம், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. இதையடுத்து ஐபிஎல் ஏலம் குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டியளித்துள்ளார்.
அதில் பேசிய அவர், “இந்த ஏலம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு எங்கள் தளத்தை நாங்கள் நன்றாகத் தயார் செய்யலாம். எனவே, சோதனைகளின் போது அனைவரையும் கண்காணித்து, முடிந்தவரை பல வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதை உறுதிசெய்துள்ளோம்.
எங்கள் இலக்கை இப்போது இலக்காகக் கொண்டு, எங்கள் பார்வையுடன் ஒத்துப்போக வேண்டும். இந்த ஏலத்தில் எங்கள் தேர்வுகள், எங்கள் குழு மீண்டும் மேலே வர உதவலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now