
ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டு, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மெகா ஏலத்தில் மிகவும் சிறப்பான வீரர்களை தேர்வு செய்து, பலத்துடன் இருப்பது டெல்லி அணி தான் என வல்லுநர்கள் பாராட்டினர். ஆனால் அவர்களுக்கே தற்போது சோதனை வந்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவை ரூ. 6 கோடிக்கு தக்கவைத்திருந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ப்ளேயிங் 11ல் சீனியர் பவுலரும் அவர் தான். டெல்லி அணிக்காக 24 போட்டிகளில் இதுவரை 34 விக்கெட்களை கைப்பற்றி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அவர் பலத்த காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதாவது அவரின் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உள்காயத்தால் கடந்த 3 மாதங்களாக சரிவர விளையாடமல் உள்ளார். ஒரே பகுதியில் 3 பெரிய பிரச்சினைகள் உள்ளது. அந்த காயங்கள் சரியாக 2 மாதங்களுக்கு மேல் ஆகும் எனத்தெரிகிறது. மேலும், ஐபிஎல் தொடரிலும் விளையாடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.