
ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அணிகளிடம் இருந்தும் எழுந்து வரும் குற்றச்சாட்டு அயல்நாட்டு வீரர்கள் முழு அளவில் இல்லை என்பது தான்.
ஒருபுறம் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் போன்ற முன்னணி அயல்நாட்டு வீரர்கள் இன்னும் ஐபிஎல் தொடருக்கே வரவில்லை. மற்றொரு புறம், ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் போட்டுவிட்டு, அயல்நாட்டு வீரர்கள் விலகி வருகின்றனர். குஜராத் அணி வீரர் ஜேசன் ராய், கொல்கத்தா வீரர் அலெக்ஷ் ஹேல்ஸ், ஆர்ச்சர் என முன்னணி வீரர்கள் விலகினர்.
ஒவ்வொரு சீசனிலும் வீரர்களின் இந்த செயல் அணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அணி நிர்வாகங்களால் எடுக்க முடியாது. தொடரில் இருந்து பாதியிலேயே விலகினால் கூட சம்பளத்தொகை வழங்கும் அளவிற்கு பிசிசிஐ பாலிசி அமைத்துக்கொடுத்துள்ளது.