
IPL 2022: CSK head coach Stephen Fleming expects Moeen Ali to recover in a week (Image Source: Google)
நடப்பு சீசனில் சற்று கம்பேக் கொடுத்திருந்த சென்னை அணிக்கு, மீண்டும் பலத்த அடி விழுந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னணி வீரர் மொயீன் அலி இல்லாததும் முக்கிய காரணம் எனக்கூறலாம். கையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து 2 போட்டிகளாக அவர் பங்குபெறாதது சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரை பாதித்துள்ளது. இனி வரும் போட்டிகளிலும் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகத்துடன் தான் உள்ளது.
இந்நிலையில் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் அதுகுறித்து பேசியுள்ளார். அதில், "மொயீன் அலிக்கு பலத்த காயம் என்பது உண்மை தான். எனினும் தற்போது உடல்நிலை தேறியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் அணிக்கு திரும்பிவிடுவார்.