ஐபிஎல் 2022: மோயின் அலி பங்கேற்பதில் சிக்கல்!
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வந்து மொயின் அலி சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மொயின் அலி. ரெய்னா பார்மில் இல்லாமல் இருந்த போது மொயின் அலி தான் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு உதவினார்.
2021ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய மொயின் அலி 15 போட்டிகளில் விளையாடி 357 ரன்கள் விளாசினார். ஸ்ட்ரைக் ரேட் 137 ஆக உள்ளது. இதே போன்று பந்துவீச்சிலும் கலக்கிய மொயின், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, குறைவான ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால் சென்னை அணிக்கு மொயின் அலி இன்றி அமையாத வீரராக மாறிவிட்டார்.
Trending
இதன் காரணமாக மொயின் அலியை விட்டுவிட கூடாது என்பதற்காக ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைக்கும் போது மொயின் அலியை சிஎஸ்கே தேர்வு செய்தது. இந்த நிலையில், சிஎஸ்கே ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் சூரத்தில் கடந்த 8 நாட்களுக்கு மேலாக நடைபெறுகிறது.
இதில் பெரும்பாலான வீரர்கள் வந்து சேர்ந்துவிட, இன்னும் மொயின் அலி மட்டும் இந்தியா வரவில்லை. தற்போது மொயின் அலிக்கு எந்த அசைன்மெண்டும் இங்கிலாந்துக்காக இல்லாத போது அவர் ஏன் இன்னும் வரவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து விசாரித்ததில் மொயின் அலியின் விசா பணிகள் இன்னும் முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மொயின் அலி விசாவுக்கு விண்ணப்பித்தும், இதுவரை மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் தான் மொயின் அலி இந்தியா வருவதில் தாமதாமாகிறது. எப்போதும் இந்த அளவுக்கு விசா பெறுவதில் தாமதம் ஆகாது. ஆனால் இம்முறை தாமத்திற்கு காரணம் தெரிவிக்கவில்லை. இன்னும் போட்டிக்கு 9 நாட்கள் தான் உள்ள நிலையில் மொயின் அலி, தனிமைப்படுத்தி கொண்டுஅணிக்கு திரும்புவதற்குள் 2 போட்டிகள் முடிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now