Advertisement

ஐபிஎல் 2022: பிரித்வி, வார்னர் அதிரடி; பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Advertisement
IPL 2022: David Warner's fifty helps Delhi Capital beat Punjab Kings by 9 wickets
IPL 2022: David Warner's fifty helps Delhi Capital beat Punjab Kings by 9 wickets (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 20, 2022 • 10:22 PM

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்

Bharathi Kannan
By Bharathi Kannan
April 20, 2022 • 10:22 PM

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் தவான் (9), மயன்க் அகர்வால்(24) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் லிவிங்ஸ்டோன்(2), பேர்ஸ்டோ(9), ஷாருக்கான்(12) ஆகியோரும் சொற்ப  ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் ஷர்மா 32 ரன்கள் அடித்தார். 

Trending

அதன்பின்னர் பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 20 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பஞ்சாப் அணி.டெல்லி கேபிடள்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய கலீல் அகமது, அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

அதன்பின் எளிய இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா - டேவிட் வார்னர் இணை தொடக்கம் முதலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கியது. 

அதிலும் பவர்பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்கள் முடிவில் 81 ரன்களைச் சேர்த்து அசத்தியது. அதன்பின் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 41 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார்.

இதன்மூலம் 57 பந்துகள் மீதமிருந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்த டேவிட் வார்னர் 60 ரன்களைச் சேர்த்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement