ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸில் ஒருவருக்கு கரோனா உறுதி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சீசனில் ஏற்பட்ட கரோனா பிரச்சினை இந்தாண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான், மும்பை நகரத்தில் மட்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்தி வருகின்றனர். அதுவும் குறைந்த அளவிலான ரசிகர்களை அனுமதித்து வெற்றிகரமாக நடத்தினர். இந்நிலையில் அதற்கும் ஆபத்து வந்துள்ளது.
Trending
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மூத்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹோட்டல் அறையில் இருந்த டெல்லி அணி வீரர்களுக்கு வழக்கமான பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு மட்டும் உறுதியாகியுள்ளது. அறிகுறிகள் இருந்ததா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனினும் அடுத்த 7 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அடுத்ததாக நாளை ஆர்சிபி அணியுடன் போட்டியுள்ளது. இந்த போட்டியில் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் தனஞ்செயா கௌசிக் வீரர்களை பார்த்துக்கொள்வார் எனத்தெரிகிறது. எனினும் மற்றவர்களுக்கும் கரோனா உறுதியாகியிருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
டெல்லி அணியிலும் பாதுகாப்பான பயோ பபுள் ஏற்பாடுகள் இருந்தன. எனினும் அவற்றினை மீறி எப்படி கரோனா பாதித்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பரிசோதனைகளில் ஏதேனும் கோளாறுகள் நடந்துள்ளனவா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now