ஐபிஎல் 2022: மார்ஷ் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் டெல்லி கேப்பிட்டள்ஸும் ஆடிவருகின்றன. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க இந்த இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமானது.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணி 2 மாற்றங்களுடனும், ராஜஸ்தான் அணி ஒரு மாற்றத்துடனும் களமிறங்கின.
Trending
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 7 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க, 3ஆவது விக்கெட்டுக்கு அஸ்வினும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து சிறப்பாக ஆடி 53 ரன்களை சேர்த்தனர். அருமையாக பேட்டிங் ஆடிய அஸ்வின் ஐபிஎல்லில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் கூட, இதுதான் முதல் அரைசதம்.
அதிரடியாக பேட்டிங் ஆடிய தேவ்தத் படிக்கல் 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை 2 ரன்னில் தவறவிட்டார். சஞ்சு சாம்சன்(6), ரியான் பராக்(9), வாண்டர் டசன் (12) ஆகிய மூவரும் சோபிக்காத காரணத்தால் நல்ல ஃபினிஷிங் கிடைக்காததால் 20 ஓவரில் 160 ரன்கள் மட்டுமே அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 161 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேப்பிட்டள்ஸுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய டெல்லி அணிக்கு இரண்டாவது பந்திலேயே ஸ்ரீகர் பரத் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் ஆரம்பத்தில் மெதுமாக ஆரம்பித்தாலும், அதன்பின் சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் அரைசதமும் அடித்த மார்ஷ் 89 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னரும் அரைசதம் கடக்க, கேப்டன் ரிஷப் பந்த தனது பங்கிற்கு அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now