
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை புதிதாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகளுடன் ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்து படைத்து வருகின்றன. நாடு முழுவதும் 10 அணிகளும் இருந்தாலும், சென்னை அணிக்கான மவுசு தனி தான். சென்னை அணிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முழு முதற்காரணம் தல தோனி.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்று விட்ட தோனி, ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருவதால், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக தோனி கேப்டன் பதவியை துறந்து, ஐடேஜாவிடம் அதைக் கொடுத்தார். சென்னை அணி புது கேப்டன் ஐடேஜா தலைமையில் களமிறங்கினாலும், தோனி இருப்பதால் சென்னை எப்போதும் போல் சிறப்பாக விளையாடும் என எல்லோரும் கூறி வந்தனர்.