
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலை கேப்டனாக ஒப்பந்தம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த அணியின் பெயர் முதல், வீரர்கள் தேர்வு வரை பின்னால் இருந்து செயல்படுவது கவுதம் கம்பீர் ஆகும். அவர் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்காக லக்னோ அணி கே.எல்.ராகுல், ரவி பிஸ்னாய், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய மூன்று பேரை தேர்வு செய்துள்ளது. முதலில் ரஷித் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறிய நிலையில், கம்பீர் வந்தவுடன் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றினார். ரஷித் கானின் இடத்திற்கு இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடாத ரவி பிஸ்னாயை தேர்வு செய்தார்.
இந்நிலையில் மெகா ஏலத்தின் போது லக்னோ அணியின் திட்டம் என்ன என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். அதில், புதிய ஒரு அணியை உருவாக்குவதில் எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக பார்க்கிறேன். நாங்கள் இதுவரை உள்ள எந்த பழைய திட்டத்தையும் பின்பற்றப்போவதில்லை. லக்னோ அணிக்கென்று தனி வழி போட்டு பயணிக்கவிருக்கிறோம்.