
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி புனேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் ஒரு ரன்னில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, விஜய் சங்கர் 20 பந்தில் 13 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடக்கம் முதலே அடித்து அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 46 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ராகுல் திவேத்தியா 8 பந்தில் 14 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 20 ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 171 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் முஸ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.