
IPL 2022: Gujarat Titans Won by 5 Wickets against LSG (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் அறிமுக அணிகளான குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான கேஎல் ராகுல், முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் முகமது ஷமி வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் குயிண்டன் டிக் காக் 7 ரன்களிலும், மனீஷ் பாண்டே 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேலும் எவின் லூயிஸ் 10 ரன்களுக்கு வருண் ஆரோனிடம் வீழ்ந்தார்.