Abhinav manohar
மகாராஜா கோப்பை 2024: ரோஹன், சித்தார்த் அதிரடியில் மங்களூரு டிராகன்ஸ் அசத்தல் வெற்றி!
கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மகாராஜா கோப்பை டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவ்றுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ஷிவமொக்கா லையன்ஸ் மற்றும் மங்களூர் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மங்களூரு டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய லையன்ஸ் அணியில் கேப்டன் நிஹால் உலால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரோஹித் 24 ரன்களுக்கும், துருவ் பிரபாகர் 20 ரன்களுக்கும், ராஜ்விர் வத்வா 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த அபினவ் மனோஹர் - அவினாஷ் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அவினாஷ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சிவராஜும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபினவ் மனோஹர் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 3 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஷிவமொக்கா லையன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Abhinav manohar
-
என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டதில் மகிழ்ச்சி - அபினோவ் மனோகர்!
என்னுடைய சிறு வயதிலிருந்து நான் பந்தை நன்றாக பார்த்து விளையாடிய வருவதால் என்னால் அதிரடியாக விளையாட முடிகிறது என்று அபினோவ் மனோகர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மில்லர், மனோகர் காட்டடி; மும்பைக்கு 208 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ராயல்ஸுக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக், மில்லர் அதிரடி; ராஜஸ்தானுக்கு 193 இலக்கு!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சையத் முஷ்டாக் அலி: சாய் கிஷோர் பந்துவீச்சில் 151 ரன்னில் சுருண்டது கர்நாடகா!
தமிழ்நாடு அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24