
சர்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சில் கொடிகட்டி பறந்தவர் ஹர்பஜன் சிங். அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் பெரும் தாக்கத்தை கொண்டு வந்தவர். அதிரடி வீரர்களையே தனது சுழற்பந்துவீச்சில் சுருட்டிய ஹர்பஜன் சிங், தற்போது தான் ஓய்வை அறிவிக்கவுள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகமான ஹர்பஜன் சிங், இதுவரை டெஸ்டில் 417 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். எனினும் இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் உள்ளது.
மேலும் ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி வீரராக இருந்தபோதும், தற்போது அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த ஐபிஎல் சீசனில் முதல் பகுதியில் விளையாடிய ஹர்பஜன், 2ஆவது பகுதியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். அவரின் ஃபார்ம் போய்விட்டதாக கூறி இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.