
IPL 2022: Hetmyer quick knock helps Rajasthan Royals post a total on 152/5 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 47ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - சஞ்சு சாம்சன் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் இந்த சீசனில் அசுர ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் 22 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயரும் 13 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.